விஜய் அண்ணாக்குத்தான் என் ஓட்டு… சத்தியம் செய்த பிரபல சீரியல் நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2024, 2:43 pm
மதுரை ஐயர் பங்களா பகுதியில் பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தனியார் பெண்கள் அழகு சாதன கடையினை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடையை திறந்து வைத்தார்.
பின்னர் ஆலியா மானசா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரை மக்களின் அன்பையும் மதுரை உணவின் சுவையையும் யாரும் மிஞ்ச முடியாது.
இதையும் படியுங்க : அரசியலில் விஜய்க்கு தான் என்னோட ஆதரவு : பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு!
உரிமையாக பாசம் வைத்து பழகுவது மதுரையில்தான் மற்ற ஊர்களுக்கு செல்வதை விட மதுரைக்கு வருவது எப்போதுமே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் மதுரை ஜிகர்தண்டா மிகவும் பிடிக்கும்.
சீரியலில் தினமும் உங்கள் அனைவரின் வீட்டிற்கு ஒன்பது மணிக்கு நான் வந்து விடுவேன் ஆனால் திரைப்படங்களில் நடித்தால் நீங்கள் தான் என்னை வந்து பார்க்க வேண்டும் எந்த சிரமமும் இல்லாமல் நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவதால் எனக்கு சீரியலில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும்.
விஜய் சாருக்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன். அவருக்கு ஆதரவு கொடுப்பதற்கு நேரம் இருக்காது. ஆனால் நிச்சயமாக ஐ வோட் ஃபார் ஹிம். மதுரை கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களில் நடிக்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.