16 வயதில் நகுல் என்கிட்ட.. ஏடாகூடாமாக.. வெளிப்படையாக பேசிய நடிகை சுனைனா..!

Author: Vignesh
7 September 2023, 10:29 am

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

sunaina - updatenews360

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

sunaina - updatenews360

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவரது, புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவி வரும்.

sunaina - updatenews360


இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுனைனா தனது முதல் பட அனுபவம் குறித்து பேசி உள்ளார். காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த போது தனக்கு 16 வயது. நடிகர் நகுல் தான் ஷூட்டிங்கில் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார், அதற்கு நான் எதுவும் சொல்லவே மாட்டேன். 16 வயது என்பதால் ஏதாவது ஏடாகூடாமாக சொல்லிவிட்டால் வேறு வகையில் சென்று விடும் என்ற ஒரு பய்ம் தான் என்று சுனைனா தெரிவித்து இருக்கிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?