தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் வரிகள் தற்போதும், பலரின் ப்ளேலிஸ்டில் உள்ளது.
இதை அடுத்து, அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது. அதன் பிறகு மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். ஏதோ சன் பிக்சர்ஸ் புண்ணியத்தில் அந்த படம் ஓரளவுக்கு சுமாராக ஓடியது. ஆனால், அந்த படங்களை அடுத்து, சுவைனாவுக்கும் நகுலுக்கும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. சீல்லு கருப்பட்டி திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இவர் பல வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.
சமீபத்திய வருடங்களாக சுனைனா ஏராளமான வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை சுனைனாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் எப்போது என தொடர்ந்து பேட்டிகளில் கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், காதலர் கையை பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து யார் அவர் என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், துபாயில் youtube சேனல் வைத்திருக்கும் Khalid Al Ameri தான் சுனைனாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், சுனைனா பதிவு செய்த புகைப்படத்தை டெலிட் செய்தாலும், Khalid Al Ameri பகிர்ந்த புகைப்படத்தை வைத்து Khalid Al Ameri தான் சுனைனாவின் வருங்கால கணவர் என்று கூறியும் வருகிறார்கள். மேலும், Khalid Al Ameri ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் பெற்று மனைவியை விவாகரத்து பெற்றுள்ளார்.
Khalid Al Ameri முதல் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அவரை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கூறியும் இருக்கிறார். இதனிடையே, இவர்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கலீத் யுடியூப் வருமானம் வருடம் 3 லட்சம் டாலர் அதோடு அவருடைய சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.