“இந்த கெட்ட பழக்கத்தை விட முடியல”… கஷ்டமா இருக்கு… புலம்பும் பிரபல நடிகை..!

Author: Vignesh
22 February 2023, 10:37 am

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

sunaina - updatenews360

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

sunaina - updatenews360

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், புடவை அணிந்து தேவதை போல இருக்கும் அவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவியது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் சுனைனா தமிழ் சினிமாவில் நடித்தும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெறமுடியாத வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.

sunaina - updatenews360

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சுனைனா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “தானக்கு சிறுவயதில் இருந்து சமைக்க பிடிக்கும் என்றும், திரைத்துறையில் வராமல் இருந்திருந்தால் செஃப் ஆக மாறியிருப்பேன் எனவும், பள்ளியில் படிக்கும் போது நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

sunaina - updatenews360

மேலும் கூறுகையில்,”அப்போதே பல கலைகளில் பயின்று வந்ததாகவும், தன்னுடைய வாழ்க்கையில் பல தவறுகள் செய்து இருப்பதாகவும், அதில் ஒன்று தான் இரவு நேரத்தில் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி கொண்டிருப்பது என்றும், மேலும் டி, காபி குடிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அதை கொஞ்சம் குறைக்க நினைப்பதாகவும், ஆனால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை” என்று வெளிப்படையாக சுனைனா கூறியுள்ளார்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?
  • Close menu