அடிக்குற வெயிலுக்கு ஐஸ் குளியல் போட்ட சுனைனா… ஐஸ் கட்டி தொட்டியில் அப்படியொரு குளியல்..!

Author: Vignesh
4 March 2024, 8:31 pm

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

sunaina - updatenews360

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

sunaina - updatenews360

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவரது, புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவி வரும்.

sunaina - updatenews360

இந்நிலையில், கடைசியாக ரெஜினா என்ற படத்தில் சுனைனா நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. பெரும்பாலும், அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனைனா படுக்கையறை லிப் லாக், படு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

தற்போது, நடிகை சுனைனா ஒரு டப் முழுக்க ஐஸ் கட்டிகள் நிரப்பி அதில் குளித்து இருக்கிறார். அதன் புகைப்படங்களை சுனைனா வெளியிட்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 264

    0

    0