லிப் லாக்.. படுக்கையறை காட்சி.. முதன் முறையாக விளக்கம் கொடுத்த சுனைனா..!

Author: Vignesh
2 October 2023, 10:48 am

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

sunaina - updatenews360

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

sunaina - updatenews360

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவரது, புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவி வரும்.

sunaina - updatenews360

இந்நிலையில், கடைசியாக ரெஜினா என்ற படத்தில் சுனைனா நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. பெரும்பாலும், அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனைனா படுக்கையறை லிப் லாக், படு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுனைனாவிடம் படுக்கையறை லிப் லாக்கில், நடித்திருந்ததை குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனைனா இதைத்தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் படத்தின் செட்டுக்கு சென்றால் அது நடிப்பு அங்கிருந்து வந்து விடுவேன். படத்தை பார்ப்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அது வெறும் நடிப்பு மட்டும் தான் என்று சுனைனா தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 532

    0

    0