இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர். 2014 -ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் மீண்டும் புதிய கூட்டணியில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்றது.
மேலும் படிக்க: கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!
இருப்பினும் அரண்மனை இரண்டாம் பாகம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதற்கு கிடைத்த வரவேற்பால் சுந்தர் சி ஆர்யாவை வைத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை உருவாக்கினார். அரண்மனை மூன்றாம் பாகத்திற்கும் கலவையான விமர்சனம் தான் வந்தது.
மேலும் படிக்க: கவுண்டமணி கூட அதை பண்ணனுமா?.. ஷாக்காகி பயந்து போன பிரபல நடிகை..!
இந்நிலையில், அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர்சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் இன்று அதிரடியாக அரண்மனை 4 படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், படு மாஸாக அரண்மனை 4 படமும் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க விருந்த நிலையில் கால்ஷீட் இல்லாத காரணத்தால் அவர் வெளியேற சுந்தர் சி அந்த ரோலில் நடிக்க முடிவு செய்தாராம். முதல் நாள் மட்டும் அரண்மனை 4 ஏழு கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் அரண்மனை 5 குறித்து பேசி உள்ளார் சுந்தர்சி. இதில், அரண்மனை 5 படத்தின் தலையெழுத்து, அரண்மனை 4 ல் தான் இருக்கிறது அரண்மனை 4 வெற்றி பெற்றால் அரண்மனை 5 உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.