மது விருந்தில் நடிகை மீனா.. ஒரே ஒரு முத்தம் : அதிர்ந்து போன பார்ட்டி!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2025, 2:12 pm
இயக்குநர் சுந்தர் சி காட்டில் நல்ல மழை என்றே சொல்லலாம். 2024ல் அரண்மனை 4 படம் மெகா ஹிட் அடித்தது. 2025 தொடக்கத்திலேயே எதிர்பாரா வகையில் வெளியான மதகஜ ராஜாவும் ஹிட் அடித்துள்ளது.

இதனால் மனுசன் ஹேப்பி மூடிலேயே உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இயக்குநர் சுந்தர் சி தனது 57வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்

பிறந்தநாள் விழாவில் பிரபலங்களை அழைத்து மது விருந்து வைத்து அசத்தியுள்ளார். விஷால், விமல், வடிவேலு, யோகிபா, கேஎஸ் ரவிக்குமார், ஆர்ஜே பாலாஜி, மீனா, ஐஸ்வர்யா ராஜேஷ், டிடி, வாணி போஜன், சங்கீதா, பிருந்தா மாஸ்டர், ஐஸ்வர்யா என பலர் பங்கேற்றனர்.

இந்த பார்ட்டியில் குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி-க்கு நச் என்று இச் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை னது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மீனா மீது விஷால் கைப்போட்டு நின்ற போட்டோ பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.
