சந்தானத்திடம் அதை சொன்னா கோவப்படுவார்…சுந்தர் சி சொன்ன அறிய தகவல்..!
Author: Selvan13 January 2025, 4:58 pm
பழைய சந்தானத்தை பார்க்க ஆசை..!
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசத்தலான பஞ்ச் காமெடியால் ரசிகர்களை குதூகல படுத்தியவர் நடிகர் சந்தானம்.ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி ரோலை தவிர்த்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர் சி தற்போது நடிகர் சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ளது.இப்படம் 2012 ஆம் ஆண்டு ஷூட் பண்ணதால் படத்தில்,சந்தானத்தின் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.
இதையும் படியுங்க: இது துபாயா இல்ல…கோடம்பாக்கமா…அஜித் கார் ரேஷை பார்க்க போன திரைப்பிரபலங்கள்..!
இதுகுறித்து சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில்,சந்தானத்தை எவ்வளவு மிஸ் பன்றேன் என்பதை மதகதராஜா படம் பார்த்தால் தெரியும் என கூறி,சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் மீண்டும் பல படங்களில் காமெடி ரோலில் நடிக்க வேண்டும்,அவரை ரொம்ப மிஸ் பன்றோம்,இதை கேட்டல் சந்தானம் கோவப்படுவார் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் அரண்மனை4 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,இந்த வருடம் மதகதராஜா திரைப்படம் சுந்தர் சி-க்கு அமோக வரவேற்பை பெற்று தந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது