இது உலகமகா நடிப்புடா சாமி- சுந்தர் சி-ஐ ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்? ஏன் தெரியுமா?
Author: Prasad21 April 2025, 5:18 pm
வெற்றி இயக்குனர்
கோலிவுட்டில் 1990களில் இருந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய எந்த திரைப்படமும் தோல்வியை தழுவியதில்லை என்றுதான் சொல்லவேண்டும். காமெடி திரைப்படங்கள் மட்டுமல்லாது காமெடி கலந்த ஆக்சன் திரைப்படங்கள் பலவற்றையும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து “கேங்கர்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை சுந்தர் சியே இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது அவர் பேசிய பல விஷயங்கள் ட்ரோலுக்குள்ளாகி வருகின்றன.
உருட்டுங்க சார் உருட்டுங்க…
“உங்கள் திரைப்படங்களில் Glamour அதிகமாக இருப்பதாக ஒரு விமர்சனம் எழுகிறதே?” என்று ஒரு கேள்வியை நிருபர் கேட்க அதற்கு சுந்தர் சி, “என்னுடைய Target Audience யார் என்று பார்த்தீர்கள் என்றால் குழந்தைகளும் Family Audience-ம் தான். அவர்கள் ரசிக்கிற மாதிரிதான் நான் படம் எடுக்கிறேன். என்னுடைய படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் இருக்காது. கொச்சையான பாடல் வரிகள் இருக்காது. எனது கதாநாயகிகள் Glamour ஆக வந்தாலும் கூட கேமிரா கோணம்தான் முக்கியம். புடவை கட்டி வந்தால் கூட கொச்சையாக காட்டலாம். நான் அதனை செய்யமாட்டேன்.
என்னால் முடிந்தளவு நான் அழகாக காட்டவேண்டும் என நினைப்பேன். இது வரைக்கும் எனது திரைப்படங்களில் ரேப் காட்சிகளை வைத்தது இல்லை. ஸ்பெஷல் ஐட்டம் பாடல் எதுவும் வைத்தது கிடையாது. ரத்தம் தெறிப்பது, தலையை வெட்டுவது போன்ற வன்முறை காட்சிகளை நான் வைத்தது இல்லை” என்று அவர் பதிலளித்தார்.
இப்பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், “உலக மகா உருட்டு” “உலக நடிப்புடா சாமி” போன்ற வசனங்களை பயன்படுத்தி இணையவாசிகள் சுந்தர் சி-ஐ ட்ரோல் செய்து வருகின்றனர்.