கவுண்டமணி கூட அதை பண்ணனுமா?.. ஷாக்காகி பயந்து போன பிரபல நடிகை..!

Author: Vignesh
2 May 2024, 6:22 pm

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

nagma goundamani

மேலும் படிக்க: சூர்யா கிட்ட அது சுத்தமா பிடிக்கல.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசிய ஜோதிகா..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள். தற்போது, எத்தனையோ காமெடி நடிகர்கள் பல காமெடிகளை செய்கிறார்கள். ஆனால், இவர்களின் காட்சியில் வரும் காமெடிகள் எப்போதும் மன மக்கள் மனதில் நிற்கும்.

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மேட்டுக்குடி படத்தில் நக்மா மற்றும் கவுண்டமணி இருவரும் வெள்வெட்டா வெள்வெட்டா என்ற பாடலில் நடனம் ஆடியது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், கவுண்டமணி மற்றும் கார்த்திக் உடன் பணியாற்றிய போது, அது என்னுடைய கோல்டன் பீரியட்ஸ். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மாமா நீ மாமா பாடல் படத்தின் இடைவெளியில் வந்தது. முதல் பாதியில் எப்படி வைத்தாலும், இடைவெளியில் வந்தால் ரசிகர்களை எந்திரிக்க விடாமல் இருக்க கவுண்டமணி அண்ணனை ஆட வைத்தேன்.

nagma goundamani

இந்த பிரச்சனை மேட்டுக்குடி படத்திலும் வந்ததும், கவுண்டமணி அண்ணன் நக்மாவுடம் டுயட் என்றதும் மகிழ்ச்சி ஆகிவிட்டார். கோவாவில் ஷூட்டிங் நடந்தது. அங்கு டிஸ்கோவுக்கு போகும்போது லுங்கி உடன் வந்தார். அதன் பின்னர், அந்த பாடலின் ஷூட்டிங் போது நக்மா என்னிடம் ஏன் கவுண்டமணி மைக்கேல் ஜாக்சன் லுக்கில் இருக்கிறார் என்று கேட்டார். உங்களுடன் டூயட் காட்சியில் ஆடத்தான் என்றதும் என்னுடன் டான்ஸ் ஆ என்று ஷாக் ஆகிவிட்டார். அதன் பின்னர் அந்த பாடலை பயங்கரமாக நக்மா என்ஜாய் செய்து ஆடினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 317

    0

    0