எந்த முட்டாளாவது அப்படி பேசுவாங்களா?.. செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டு அழுத குஷ்பூ..!
Author: Vignesh11 மே 2024, 2:18 மணி
தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)
இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. இப்படத்தின் பிரமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட சுந்தர் சி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், ஒன்றாக அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பூ சில சமயங்களில் சர்ச்சைகளில் சிக்கினால் நீங்கள் கணவராக எப்படி அறிவுரை கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில், அளித்த சுந்தர்சி சில விஷயங்கள் தப்பாக புரிந்து கொள்ளப்படுகிறது.
2004 இல் தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்று குஷ்பு கூறினார் என்று மாலை பத்திரிக்கையில் ஒன்றில் போட்டனர். சொல்லாத ஒன்றினை போட்டவர்களை பார்த்து காலையில் வேறொரு பத்திரிகை ஒன்று வேறு விதமாக மாற்றி செய்தி போட்டனர். அவர்களுக்கு மேல் நாங்கள் என்று மற்றொரு பத்திரிக்கை தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்று அசிங்கமான வார்த்தையை போட்டார்கள். எந்த முட்டாளாவது அப்படி பேசுவார்களா? நம்புவார்களா? இது உடனே பிரச்சனையானது. அப்போது ஒரு கணவனாக என் மனைவிக்காக சப்போர்ட் செய்தேன்.
மேலும் படிக்க: கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!
அப்போது, ஜெயலலிதா அம்மா தான் உதவினார்கள். சும்மா ஒரு மன்னிப்பு கேட்பது போல் ஒரு பேட்டி கொடுத்து விடுங்கள். இதை அரசியலாக மாற்றுகிறார்கள் என்று ஜெயலலிதா அம்மா சொன்னார்கள். இதற்கு ஒரு விளக்கம் கொடுத்து விடு, நான் சொன்னது தப்பாக புரிந்து கொள்ளப்பட்டது என்று மன்னிப்பு சொல்லிவிடு நான் சொன்னேன். அதற்கு அப்படி அழுதார்கள். நான் பண்ணாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பூ சொன்னதுக்கு நான் சொல்லிவிடு என்று சொன்னதற்கும் இன்று வரை நான் வருத்தப்படுகிறேன். எப்போதும் அவருக்கு சப்போர்ட்டாக இருப்பேன் என்று சுந்தர்சி தெரிவித்துள்ளார்.
0
0