நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!
Author: Prasad28 April 2025, 2:38 pm
மூக்குத்தி அம்மன் 2
“கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்க இவருடன் ஊர்வசி, ரெஜினா கஸண்ட்ரா, மீனா, யோகி பாபு, துனியா விஜய் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சமயத்தில் நயன்தாராவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக சில செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுந்தர் சி, இதனை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நயன்தாரா இப்படி செய்வாங்கனு எதிர்பாக்கல…
“இப்படிப்பட்ட செய்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. முதலில் பொள்ளாச்சியில்தான் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் கேங்கர்ஸ் படத்தின் பணிகளும் எனக்கு இருந்தது.
நான் பொள்ளாச்சியில் இருந்தால் கேங்கர்ஸ் பணிகளை கவனிக்க முடியாது என்பதால் படப்பிடிப்பை சென்னைக்கு இடமாற்றினோம். நயன்தாராவை பொறுத்தவரை மிகவும் அர்ப்பணிப்பான நடிகை. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இடைவெளியில் கேரவனுக்கு கூட போகமாட்டார். காலை படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தால் நான் பேக் அப் சொல்லும் வரை அந்த படப்பிடிப்புத் தளத்தை விட்டு நகரமாட்டார்.

ஆனால் எப்படி தவறான செய்திகள் வெளிவருகிறது என தெரியவில்லை. நான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது அல்லவா?” என்று கூறினார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
