ஏன் சாணியை நீ அள்ள மாட்டியா?.. சுந்தர் சி யை அசிங்கமாக திட்டிய மணிவண்ணன்..!
Author: Vignesh13 May 2024, 6:53 pm
தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)
இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 பட உருவாகி வரும் மே மூன்றாம் தேதி தேர்தலில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வரும் சுந்தர் சி கொடுத்த பேட்டி ஒன்றில் மணிவண்ணன் குறித்த ரகசியத்தை முதல் முறையாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக ஒரு படத்தில் முதல் நாள் ஷூட்டிங் நடுரோட்டில் நடந்தது. அந்த ஷாட்டை எடுக்கும் பொழுது அங்கிருந்த சாணியை என்னை எடுக்க சொன்னார். நானும் எனக்கு கீழிருந்த மற்ற உதவி இயக்குனர்களிடம் கூறி சாணியை எடுக்கும்படி சொன்னேன். இதைக் கேட்ட மணிவண்ணன் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டுவதோடு, மட்டுமல்லாமல் நீ ஏன் சாணியை எடுக்கவில்லை என மட்டமான கெட்ட வார்த்தையில் திட்டினார்.
பலமுறை என்னை எப்படி திட்டியிருக்கிறார். அவர் அப்படி திட்டியதால்தான் நான் மிகச் சிறந்த இயக்குனராக மாறியிருக்கிறேன். சினிமாவை பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை அவங்க செய்வாங்க இவங்க செய்வாங்க என்று இருந்தால், நம்மால் வெற்றியடைய முடியாது. ஒவ்வொரு செயலும் நமக்கு ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுக்கும் என்று சுந்தர் சி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.