மூன்று ஹீரோக்களுடன் சுந்தர்.சி கலக்கும் ‘காபி வித் காதல்’ பல சிக்கலுக்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Author: Vignesh
8 October 2022, 5:30 pm

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் காபி வித் காதல்.

காபி வித் காதல் திரைப்படம் நடிகர் ஜீவா நடிப்பில் வருகிற நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காபி வித் காதல்’திரைப்படத்தில் இயக்குநர் ஜீவா, மாளவிகா சர்மா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் பிரதாப் போத்தன், யோகிபாபு, சம்யுக்தா ஷண்முகம், ரெடின் கிங்ஸ்லி, விச்சு விஸ்வநாத், திவ்யதர்ஷினி , அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

TamilcinemaNews_UpdateNews360

காபி வித் காதல் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் ஜீவா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது நவம்பர் 4-ஆம் தேதி ‘காபி வித் காதல்’திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறியுள்ளார். தமிழகமெங்கும் காபி வித் காதல் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?