அம்மா கிட்ட.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி பண்ணுவாரு.. வடிவேலு குறித்து ராதா பளீச்..!

Author: Vignesh
27 September 2023, 3:15 pm

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ராதா, ஏற்கனவே ஒருவருடன் தொடர்பில் இருந்து பின் திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார். இதனிடையே, நடிகர் முரளி நடிப்பில் 2002 இல் வெளிவந்த திரைப்படம் சுந்தரா டிரவல்ஸ்.

செந்தில்குமார் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் கதாநாயகியாக ராதா நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதன் பின்னர் இவர் கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்தார்.

அண்மையில், பிரபல யூடியூப் ஒன்றுக்கு ராதா பேட்டியளித்து இருக்கிறார். அப்போது ராதாவிடம் “ஒரு தரப்பு வடிவேலு நமக்கு திரைப்படத்தில் ஸ்பேஸ் தரமாட்டார் என்று கூறுகிறார்கள், இன்னொரு தரப்பு வடிவேலு நிறை உதவி செய்வார் என்று கூறுகிறார்கள். வடிவேலுவுடன் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நீங்கள் நடித்துள்ளீர்கள். அவரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

radhasundara-updatenews360

அதற்கு பதிலளித்த நடிகை ராதா “வடிவேல் சார் ரொம்ப கோப்ரேட் பண்ணுவாரு, அன்பா இருப்பாரு, ரொம்ப நட்பா இருப்பாரு.. டயலாக்ஸ் எல்லாம் நான் எப்படி பேசுகிறேனோ, அதற்கு கோப்ரேட் பண்ணி பண்ணுவாரு, இப்போ வடிவேல் சார் எப்படினு எனக்கு தெரியாது.

அப்போ ரொம்ப உதவி பண்ணுவாரு. அந்த பொறாமை எல்லாம் அவர்கிட்ட இல்ல. ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், அம்மாவும், வடிவேல் சாரும் ஒன்னாதான் சாப்பிடுவோம். என்னுடைய அம்மாவை பார்த்ததும் “பவானி அம்மா வா..மா” என்று கூப்பிடுவார். நாங்கள் ஒன்னாதான் அமர்ந்து சாப்பிடுவோம்” என்று ராதா பேசி உள்ளார்.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 404

    0

    0