’அவன் வந்திருக்கான் மச்சான்’.. சுந்தரா டிராவல்ஸ் 2 பட சூப்பர் அப்டேட்!

Author: Hariharasudhan
19 February 2025, 12:46 pm

இயக்குநர் கறுபு தங்கம் இயக்கத்தில், சுந்தரா டிராவலஸ் படத்தின் 2ஆம் பாகத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குநர் தாஹா இயக்கத்தில், முரளி, வடிவேலு, ராதா, விணுச்சக்கரவர்த்தி, பி.வாசு உள்ளிட்ட பலரது நடிப்பில், கலகலப்பான காமெடி காட்சிகளுடன் வெளியான படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று, முரளி – வடிவேலு காம்போவால் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் 2அம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கருணாஸ், கருணாகரன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மேலும், இவர்களுடன் பிரபல தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணனும் நடிகராக அறிமுகமாகிறார். அது மட்டுமின்றி, விக்னேஷ் – அஞ்சலி ஆகிய இருவரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். கறுப்பு தங்கம் இப்படத்தை இயக்கி வருகிறார். செல்வா ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

Sundhara Travels 2

மேலும், இப்படம் குறித்து இயக்குநர் கறுப்பு தங்கம் பிரபல நாளிதழிடம் கூறுகையில், “இந்தக் கதையில் பஸ் தான் ஹீரோ. அதை மையப்படுத்திதான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி உள்ளோம். இதற்காக பஸ்சை விலைக்கு வாங்கி, அதனை படத்துக்கு ஏற்றார் போல் தயார்படுத்தி படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்.

இதையும் படிங்க: பட வாய்ப்பே இல்ல… பல கோடி சம்பாதிக்கும் பாகுபலி நடிகை.. ஆச்சரியத்தில் திரையுலகம்!

இதன் படப்பிடிப்புகள், கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி, காரைக்குடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்தியுள்ளோம். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது 2ஆம் பாகம் எடுக்கும் கோப்பு தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள நிலையில், அதில் சில படங்களே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு, தற்போதைய ரசிகர்களுக்கும் ஏற்ற திரைக்கதையோடு அமைந்தால் இப்படமும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply