Sorry… தப்பு தப்பா ஆடுறேன்ல? “காவலா” பாடலுக்கு ஆட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட சன்னி லியோன்!
Author: Shree30 September 2023, 4:37 pm
இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.
சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 54.5 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.
தன்னுடன் ஆபாச படத்தில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு வளர்ப்பு பிள்ளை, வாடகை பிள்ளை என மொத்தம் மூன்று குழந்தைகள். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தற்போது காவலா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “சாரி காவாலா பாட்டுக்கு நான் தப்பு தப்பா ஸ்டெப்ஸ் போட்டு ஆடுறேன்னு தெரியுது. ஆனால், அந்த ஷாட் வீடியோவில் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு நம்புகிறேன். சீக்கிரமே உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு சன்னியோன் வெறியன்ஸ்… அட டான்ஸ் வேற மாறி இருக்கு சூப்பரு என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ: