சன்னிலியோனுக்கு என்ன ஆச்சு..? படுக்கையில் இருந்து வெளியிட்ட வீடியோ : பதறிப் போன ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 12:10 pm

பாலிவுட்டில் திடீரென இளம் கதாநாயகிகளே படு கவர்ச்சி உடைகளில் நடிக்க ஆரம்பித்ததும் சன்னி லியோனின் மார்க்கெட் பெருமளவில் சரியத் தொடங்கின.

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான சன்னி லியோன், அதில் இருந்து விலகி, பாலிவுட்டில் வெகுநீண்ட தூரம் வந்துவிட்டார். பாலிவுட் திரைப்படங்களில் அசத்தலாக நடித்து வரும் அவர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் ஆடியோ லாஞ்சுக்களில் பங்கேற்று லட்சகணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.

ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிகர் சன்னிலியோன் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில், தமிழில் வெளியாகியுள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் வீடு வாங்கி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் சன்னி, தனது படுக்கையறையில் இருந்து வீடியோ ஒன்று எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

அதில், உதட்டில் காயம் இருப்பது குறித்து அவர் விவரித்து பேசியுள்ளார். “யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். என்னுடைய உதடு காயத்திற்கு ஒரு விசித்திரமான காரணம் இருக்கிறது. உதடு காயத்திற்கு காரணம் மொபைலே தவிர! வேறு இல்லை. மொபைல் போனை செல்பி செடுக்க மேலே தூக்கி பிடிக்கும் போது, அது நழுவி முகத்தில் விழுந்து விட்டது. இதனால், ரத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறியபடியே, தனது கணவர் டேனியல் நிம்மதியாக தூங்குகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி