அம்மிஅம்மி அம்மி மிதித்து.. Re Telecast இல்லை.. விரைவில் “மெட்டி ஒலி2” ..!

Author: Vignesh
1 August 2023, 1:15 pm

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 2002 ஆம் ஆண்டு டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்த தொடர் ‘மெட்டி ஒலி’.

metti oli -updatenews360

அந்த வகையில், சன் டிவியில் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்த மெட்டிஒலி தொடர் 2002 ஆம் ஆண்டு திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பானது. இந்த மெட்டிஒலி தொடர் 2005 ஆம் ஆண்டு வரை 811 எபிசோடு வெற்றிகரமாக ஓடியது.

metti oli -updatenews360

இதில் ஒரு தந்தைக்கு ஐந்து மகள்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர் படும் கஷ்டங்களை இந்த தொடரில் முக்கிய கருவாக இருந்தது. இந்த தொடர் ஒரு காலகட்டத்தில் காலத்தில் டாப்பில் இருந்தது என்றே சொல்லலாம்.

metti oli -updatenews360

கொரோனா காலகட்டத்தில் கூட இந்த தொடர் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. அப்போதும், ரசிகர்களால் சீரியல் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மெட்டிஒலி தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாகவும், 2 வாரத்தில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்று நம்பக தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!