பட வாய்ப்பு இல்லாததால் ரூட்டை மாற்றிய 6 நடிகைகள்.. வடிவேலுவுடன் டூயட் பாட ஓகே சொன்ன ஹீரோயின்கள் ..!
Author: Vignesh6 July 2023, 2:30 pm
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். இதையடுத்து லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வடிவேலு உடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பல குற்றச்சாற்றுகளை பகிர்ந்து வருகின்றனர்.
காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்து தவித்த பல நடிகைகளுடன் கவர்ச்சியாக குத்தாட்டமும் போட்டுள்ளார். அந்த நடிகைகளுக்கு ஒரு பாட்டிற்கு இலட்சக்கணக்கில் சம்பளமாகவும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அப்படித்தான் நடிகை அசினுடன் போக்கிரி படத்தில் கஜினி பட பாடலான சுற்றும் விழி சுடரே பாடலுக்கு ரீ கிரியேட் டூயட் ஆடி இருக்கிறார் வடிவேலு. இந்த பாடலுக்கு அசினுக்கு 10 லட்சம் வரை தனியாக சம்பளம் வழங்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியானது.
இதுபோன்று, தமிழில் டாப் இடத்திற்கு முன்னேறிய நடிகை தமன்னாவுடன் தில்லாலங்கடி படத்தில் டூயட் பாடலுக்கு ஆட வேண்டும் என்று வடிவேலு அடம் பிடித்து தமன்னாவை கண்வீன்ஸ் செய்து அதை நடத்தையும் காட்டியுள்ளார். இதற்காக மட்டும் தமன்னாவுக்கு 15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் தெனாலிராமன் படத்தில் மார்க்கெட்டை இழந்த சூழலில் வடிவேலுவுடன் டூயட் பாட்டிற்கு ஆட்டம் போட்டு இருக்கிறார் நடிகை சதா. அந்த படத்திற்காக சதாவுக்கு 25 லிருந்து 35 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது.
சதாவைத் தொடர்ந்து அவருடன் ஜோடி போட்டு ஆட்டம் போட்டவர் நடிகை தேஜாஸ்ரீ. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் பஞ்சவர்ணக்கிளி என்ற பாடலுக்கு தேஜாஸ்ரீ உடன் வடிவேலு டூயட்டில் கொஞ்சம் ஓவராகவே ஆடி இருப்பார்.
ஒரு சில படங்களிலே நடித்து டாப் இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் வடிவேலுவுடன் நடித்தும் ஆட்டம் போட்டிருப்பார். இதற்காக இவருக்கு மிகப்பெரிய தொகையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் மற்றொரு நடிகையாக நடித்த நடிகை மோனிகா ஆசை கனவே பாடலுக்கு வடிவேலு உடன் டூயட் பாட்டிற்கு ஆட்டம் போட்டு இருக்கிறார். இந்தப் பாடலுக்காக மட்டும் இவருக்கு 15 லட்சம் அள்ளிக் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.