மழைக்கு பயப்படாத ஒரு வாழ்க்கை எனக்கு வேணும் – சூப்பர் சிங்கரில் கலங்க வைத்த மீனவ மகள்!

Author: Shree
27 May 2023, 12:09 pm

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி வருகிற ஜூன் மாதத்திலேயே ஆரம்பமாக இருக்கிறது. இதற்காக போட்டியாளர் தேர்வுகள் முடிந்து நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்களில் ஒருவர் தான் கென்லிசிஜா. இவர் இராமேஸ்வரத்தில் வசிக்கிறார். இவர் மீனவக் குடும்பத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் அவரது அறிமுக ப்ரோமோ வீடியோவில் , நான் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்த கென்லிசிஜா. எனக்கு மழையினா பயம். ஏன்னா மழை வந்தாலே எங்கள் வீடு முழுக்க மழை நீர் ஒழுகும். அதில் அங்கங்க பாத்திரம் வைத்து பிடித்து ஓரளவுக்கு வீடு நினையாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

என் அப்பா கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிடுவார். அப்போதெல்ல்லாம் அப்பா எப்ப வருவார் என்று அம்மா கடலையே பார்த்துட்டு இருப்பாங்க. அப்போ அம்மாவுக்கு ஆறுதலாக என் மட்டும்தான் இருக்கும். என் ஆசை, கனவு எல்லாமே மழைக்கு பயப்படாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதற்கு நான் எடுத்து வைக்கிற முதல் படி தான் இந்த சூப்பர் சிங்கர் மேடை என்று மனஉருக்கத்தோடு கூறியிருக்கிறார்.

இந்த பிஞ்சு குழந்தை மனதில் இவ்வளவு வலிகளா? என ஆடியன்ஸ் வருத்தமடைந்து கென்லிசிஜா பாடலின் மீது கவனத்தை செலுத்தியுள்ளனர். இந்த ப்ரோமோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!