நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை நேற்று திருமணம் செய்துக்கொண்டார்.
அசோக் செல்வன் ஏற்கனவே சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதியுடன் நெருக்கமாக பழகி அவருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி என இருவரும் கூறினார்கள். இந்நிலையில் அசோக் செல்வன் திருமணம் செய்தி கேட்டு பிரகதி கனடாவிலிருந்து ஓடோடி வந்துள்ளார். திருமணத்தில் அசோக் செல்வனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.