நாயகியாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. அச்சு அசல் நயன்தாரா மாதிரியே… வெளியான First Look : அசந்து போன ரசிகர்கள்..!

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷை தொடர்ந்து தற்போது சினிமாவில் நாயகியாக அவரது மனைவி ராஜலக்ஷ்மியும் அறிமுகமாகி இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.

செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மியின் ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள். விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.

பின் பல நாட்டுப்புற பாடல்களை இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மியின் இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார்.

ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.தற்போது செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. அதே போல ”வாயா சாமி ” பாடலை இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள்.

தற்போது செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரும் நாயகியாக களமிறங்கி வருகிறார். தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் விழா ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய ராஜலட்சுமி இது ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க நான் தயங்கினேன் பின்னர் என் கணவர் கொடுத்த தைரியத்தால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார் ராஜலக்ஷ்மி. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது, அதில் அறம் நயன்தாரா லுக்கில் ராஜலட்சுமி இருக்கிறார்.

Poorni

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

9 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

10 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

11 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

11 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

11 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

12 hours ago

This website uses cookies.