“அயலான்” படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

Author: Rajesh
26 January 2024, 9:28 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வெளிவந்த அயலான் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இப்படத்தின் ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் கட்சிகளுடன் இப்படம் வெளிவந்து வசூலில் பட்டய கிளப்பியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி போன் செய்து பாராட்டியுள்ளாராம் “எப்படி இப்படி விதவிதமான படங்களில் நடிக்கிறீர்கள். வித்தியாசமான படங்கள் கொடுக்க வேண்டும் என உங்களது எண்ணம் பிடித்து இருக்கிறது. இதில் நீங்க எனக்கு முன்னோடி” என ரஜினி சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டினாராம். அயலான் வெளியான அதே நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளிவந்து வசூலில் பின்தங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ