விஜய்யை பற்றி மனம் திறந்து பேசிய ரஜினி.. லியோ படம் வெற்றி பெற வேண்டுவதாக பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 1:26 pm

விஜய்யை பற்றி மனம் திறந்து பேசிய ரஜினி.. .லியோ படம் வெற்றி பெற வேண்டுவதாக பேட்டி!!

ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை செல்வதற்காக இன்று காலை கன்னியாகுமரி-யில் இருந்து தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார் ரஜினிகாந்த.

அப்போது அங்கு செய்தித்தாளர்களை சந்தித்து ரஜினிகாந்த கூறுகையில், புவனா ஒரு கேள்வி குறி திரைப்படத்திற்கு பின் 40 ஆண்டு காலம் கழித்து தற்போது சூட்டிங்-காக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்,

தென் மாவட்ட மக்கள் அன்பான மக்கள்., மகிழ்ச்சியாக உள்ளது… அவர்களுடன் புகைப்படம் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.. லியோ மிக பெரிய வெற்றி அடையனும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என்றார்.

  • Allu Arjun starts for police Inquiry விசாரணைக்கு ஆஜரான அல்லு அர்ஜூன்.. கைது செய்ய தீவிரம்.. போலீஸ் குவிப்பு!
  • Views: - 395

    0

    0