கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
மேலும் படிக்க: குழந்தை நட்சத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் Torture.. அவரே வெளியிட்ட உண்மை..!
இப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினி கையில் வாட்ச் கை விளங்காக மாட்டப்பட்டு இருக்கிறது. மேலும், பின்னணியில் வாட்ச் தான் போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது. அதனால், இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக, தலைவர் 171 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இருக்கும் என்றும், இதுவரை ரஜினி நடித்திராத ஒரு கேரக்ராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் லோகேஷ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து இதுவரை வெளிவராத தகவல் ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதாவது, ரஜினிகாந்த் வறுமையில் இருந்தபோது ஆபீஸ் பாய், கூலி வேலை என பார்த்து இருக்கிறார். அப்போது, வாழ்க்கையின் மீது பிடிப்பும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாராம். ஆனால், சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாம். பிறகு அன்றைய இரவு தூங்க சென்று இருக்கிறார்.
அப்போது, கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் அவரை நோக்கி வந்தாராம். பிறகு அவர் தண்ணீரில் நடந்து வந்தது போலவும் அவரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியது போலவும் கனவில் காட்சிகள் வந்ததாம். மறுநாள் அனைவரிடமும் இது குறித்து, ரஜினி சொல்ல சுவரில் வரையப்பட்டிருந்த ராகவேந்திரர் ஓவியம் என்று கூறியிருக்கிறார். அதன் பின் ராகவேந்திரன் கோவிலுக்கு சென்று வேண்டிருக்கிறார் ரஜினி. அதன் பிறகு நடத்துனர் வேலை கிடைக்க பிறகு நடிகராகவும் மாறினாராம்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.