அஜித்தின் அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்ட சூப்பர்ஸ்டார்.. இந்த படமா ? சிறப்பா இருக்குமே..!

Author: Vignesh
20 July 2024, 2:54 pm

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் அஜித். தற்போது, இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே இதுவரை முடிந்துள்ளதாகவும், கூறப்படுகிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா இவர்கள் இருவரும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என நான்கு திரைப்படங்களை கொடுத்துள்ளனர். இதில், இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கடைசி படம் தான் விசுவாசம்.

2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு உலக அளவில் ரூபாய் 187 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் பேட்டி ஒன்று கலந்து கொள்கையில் விசுவாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார். இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!