நான் நடிக்கிறேன் ப்ளீஸ்… அஜித்தின் தோல்வி பட கதைக்காக கெஞ்சிய சூப்பர் ஸ்டார்!
Author: Shree15 March 2023, 11:22 am
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புது படம் எது வெளியானாலும் உடனே பார்த்து விடுவாராம். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்ட உடனே அப்படத்தின் இயக்குனரை வீட்டிற்கு வரவைத்து மரியாதை செய்து அடுத்த கதை எதாவது இருக்கா என கேட்பாராம்.
அவர் அப்படிதான் இயக்குநர்களை தேர்வு செய்து பல வருடங்களாக நடித்து வருகிறார். இந்நிலையில் லிங்குசாமி இயக்கி மாதவன் நடித்து சூப்பர் ஹிட்டான ரன் படத்தினை ரஜினிகாந்த் பார்த்து உடனே லிங்குசாமியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்போது அவரின் அடுத்த படமான “ஜி”கதையில் அஜித் நடிப்பதாக கூறனாம். கதையை கேட்ட ரஜினிகாந்த் நான் நடிக்கிறேன் என கூற லிங்குசாமி உங்களால் முடியாது. அது கல்லூரி மாணவராக உங்களுக்கு செட்டாகாது என்று கூறியிருக்கிறார்.
உடனே ரஜினி ஏதேனும் வேலை செய்யும் நபர் போல் கதையை மாற்றிகொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அஜித்துக்கு தான் இந்த கதை செட் ஆகும் அவர் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கிறார் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் ஜி படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. ஒரு வேலை ரஜினி சொல்லியது போல் கதையை மாற்றியிருந்தால் படம் ஹிட் ஆகியிருக்குமோ என லிங்கிசாமி பின்னர் வருந்தினாராம்.