அஜித்துக்கு பத்மபூஷன்… ரஜினி சொன்ன ஒற்றை வார்த்தை : சிலாகித்த ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2025, 10:12 am

ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது. இந்த முறை நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… சென்னை NIA சோதனையில் பகீர்!

இதையடுத்து அவரது ரசிகர்கள், பொதுமக்கள், உலகத்தில் உள்ள தமிழர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். திரையுலகத்தினரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

அந்த வகையில் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.

Rajini Wish to Ajith

சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம், அஜித் பத்மபூஷன் விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் கூறினார்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!