ரஜினி சூப்பர் ஸ்டார் ஆக காரணமே அவரது காதலிதான்… முதல் சந்திப்பில் மலர்ந்த காதல் கதை..!

Author: Vignesh
17 August 2023, 8:29 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பிஸியாக நடிகராக வலம் வந்த ரஜினியை பேட்டி எடுக்கும் வாய்ப்பு லதாவுக்கு கிடைத்திருக்கிறது. சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பயின்றபோது ஒரு நாளிதலுக்காக ரஜினியை பேட்டி எடுக்க வந்திருக்கிறார் லதா. இதற்காக ரஜினியிடம் 20 நிமிடத்திற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரை சுமார் 2 மணி நேரம் பேட்டி எடுத்தாராம்.

latha-updatenews360

இந்த ரெண்டு மணி நேரம் பேட்டியில் ரஜினிக்கு லதா மீது காதல் ஏற்பட்டதாம். பேட்டி முடிந்து கிளம்பும் லதாவிடம் தன்னுடைய காதலை சொல்லாமல் நேராக நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிறேன் என விசயத்தை போட்டு உடைத்துள்ளார் ரஜினி.

நேருக்கு நேராக அவர் இதைக் கேட்ட விதம் லதாவுக்கு பிடித்து போக பெற்றோரிடம் பேசும் படி கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதன்பின் இவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியவுடன் கடந்த 1981 ஆம் ஆண்டு லதாவை கரம் பிடித்தார் ரஜினிகாந்த்.

latha-updatenews360

இவர்களது திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் குடி மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான ரஜினியை தன் அன்பால் மாற்றியுள்ளார் லதா. இதனை ரஜினியே பல பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

latha-updatenews360

இந்நிலையில் ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அதீத காதல் அன்போடு பேசியுள்ளார். அதாவது எனக்கு ஆரம்ப காலத்தில் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், பாக்கெட் கணக்கில் சிக்ரெட் பிடிப்பேன் இதெல்லாம் என்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்தது. பின்னர் பல படங்களில் ஸ்டைலுக்காகவே சிக்ரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பேன் அதையெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் ரசித்தார்கள்.

ஆனால், அந்த அத்தனை கெட்ட பழக்கங்ககளில் இருந்தும் என்னை மீட்டெடுத்துவர் என்னுடைய மனைவி லதா தான், என் மனைவியின் அன்பாலும், நல்ல மருத்துவர்களின் சிகிச்சையாலும் தான் இன்று நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதற்காக தன்னை லதாவிடம் அறிமுகம் செய்து வைத்தத நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்றுவரை நன்றி சொல்கிறாராம் ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் லதா மீது உள்ள காதலை இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ