ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2024, 4:22 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் வேட்டையன். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலில் குறை வைக்கவில்லை.

இதையடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார். இடையே ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஓய்வெடுத்தார்.

Rajinikanth Plan to Go America for Treatment

இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகத்மும் தயாரா உள்ள நிலையில் ரஜினி ரொம்பவே பிஸியாக உள்ளார்.

இதையும் படியுங்க: பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!

ஆனால் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், உடல் பரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் அறிவுரைப்படி நடக்க முடிவெடுத்துள்ளதகாவும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Rajinikanths America Treatment

ஏற்கனவே சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள செல்கிறார் என்ற செய்தி ரஜினி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!