அடுத்த மாதமே ரிலீஸ் ஆகும் சூப்பர்ஸ்டார் ரஜினி படம்..உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Author: Selvan
16 November 2024, 5:07 pm

தளபதி படம் ரீ-ரிலீஸ்

இந்திய சினிமாவில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 170 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி சும்மா கெத்தா வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

THALAPATHY MOVIE RE RELEASE

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாள் ரசிகர்களால் பிரமாண்டமாக கொண்டாடப்படும்.அந்த வகையில் அடுத்த மாதம் டிசம்பர் 12 ஆம் தேதி மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த திரைப்படம் ‘தளபதி‘. இதில் ஷோபனா, அரவிந்த் சாமி, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பார்.


இதையும் படியுங்க: விஜயை தூக்கி சாப்பிட்ட அல்லு அர்ஜுன்….புஷ்பானா flower-னு நினைச்சியா.. fire டா..!

இந்தப் படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் மக்கள் மத்தியில் இன்றும் ஒரு EVER GREEN படமாக இருந்து வருகிறது.அந்த வகையில் அடுத்த மாதம் டிசம்பர் 12 ஆம் தேதி தளபதி படம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது.

மேலும் அவர் நடித்து வரும் கூலி,ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவலும் வந்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 153

    0

    0