குஷ்புவை வெறிக்க வெறிக்க பார்த்து சைட் அடித்த சூப்பர் ஸ்டார்…. காதல் ஏக்கம் காத்தோடு போச்சு!
Author: Rajesh21 December 2023, 2:49 pm
தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
குஷ்பு சுந்தர் சியை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் பிரபுவை காதலித்து வந்தது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். ஆனால், அந்த காதலுக்கு சிவாஜி கணேசன் எதிர்ப்புகள் தெரிவித்ததால் பிரேக் செய்துக்கொண்டனர். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார் குஷ்பு.
இதுவரை குஷ்பு பிரபுவுடன் மட்டும் தான் கிசு கிசுக்கப்பட்டு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதன்முறையாக ரஜினியுடன் கிசுகிசுக்கப்பட்ட செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதாவது, அண்ணாமலை படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது வயதான கெட்டப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு குஷ்பு வந்ததும் அவரை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து ரசித்தாராம் ரஜினி. அதை தெரிந்துக்கொண்டு குஷ்பு ” என்ன அப்படி பாக்குறீங்க” என கேட்க ” ஒண்ணுமில்ல உன்னை திருமணம் செய்துக்கொள்பவர் கொடுத்து வைத்தவர் என்றாராம்.