வெற்றிமாறன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்…? அடுத்த படத்துக்கு நான் ரெடி – கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த தலைவர்!
Author: Shree8 April 2023, 2:47 pm
விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.
வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனர்கள் காமெடி நடிகர்களை வைத்து படம் எடுக்கவே யோசிப்பார்கள். ஆனால் வெற்றி சூரி மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கினார். அதேபோல் சூரியும் கான்ஸ்டபிள் வேடம் என்பதை அலட்சியப்படுத்தாமல் வெற்றி தன் மீது வைத்த நம்பிக்கைக்காக தன்னை ஒவ்வொரு காட்சியிலும் மெருகேற்றி நடித்துள்ளார்.
பொதுவாக எந்த புது படங்கள் வெளியானாலும் அதை பார்த்துவிட்டு சிறப்பாக இருந்தால் அந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுவது ரஜினியின் பழக்கம். அப்படிதான் தற்போது விடுதலை படக்குழுவினரை வீட்டிற்கு அழைத்து சும்மா பிண்ணிட்டீங்க வெற்றி என கட்டியணைத்து வாழ்த்தியுள்ளார். அத்தோடு சூரியின் நடிப்பு பிரமாதம் என கூறியுள்ளார். ஆக ரஜினி அடுத்ததாக வெற்றிமாறனின் இயக்கத்தில் நிச்சயம் நிச்சயம் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூரி, “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.