350 துணை நடிகர்களை ஏமாற்றினாரா ஷங்கர்? பரபரப்பு புகார்!
Author: Hariharasudhan26 February 2025, 5:53 pm
கேம் சேஞ்சர் படத்தில் 350 துணை நடிகர்களுக்கான சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: பிரமாண்ட் இயக்குநராக அறியப்படும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம், கடந்த ஜனவரி 10ம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தரப்பில் தில் ராஜு இப்படத்தை தயாரித்திருந்தார்.
ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை டோலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி பெறவில்லை. இதனிடையே, இந்தப் படத்தில், ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்த 350 பேர் துணை நடிகர்களாகப் பங்கேற்று இருந்துள்ளனர். இவர்கள், இணை இயக்குநர் ஸ்வர்கன் சிவா என்பவர், தலா ஆயிரத்து 200 ரூபாய் தருவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்தும், பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை என்றும், ஸ்வர்கன் சிவா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குண்டூர் காவல் நிலையத்தில் துணை நடிகர்களாக பங்கேற்ற 350 பேரும் புகார் அளித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் தில் ராஜுவும், இயக்குநர் ஷங்கரும் இணைந்து இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கேம் சேஞ்சர்: அரசு அதிகாரிக்கும், அரசியல் தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்னையை மையக்கருவாகக் கொண்டு உருவான இப்படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருந்தார். ஆனால், படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தோல்வியைத் தழுவியிருந்தது.
இதையும் படிங்க: நயன்தாராவை புகழ்ந்து பேசிய தனுஷ்.. ச்சே எவ்ளோ நல்ல மனசு!
முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் என பலர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படமும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால், இயக்குநர் ஷங்கர் பெரும் சிக்கலுக்கு ஆளானார். இந்த நிலையில், துணை நடிகர்களின் புகார் ஷங்கருக்கு மேலும் சங்கடத்தை அளித்துள்ளது.