பாலியல் தொழிலாளியாக நடிக்கும் ஆலியாபட்.. படத்தின் பெயரை மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

Author: Rajesh
24 February 2022, 10:29 am

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அலியா பட் நடித்துள்ள திரைப்படம் தான் ‘கங்குபாய் கத்தியவாடி’ மும்பையில் பாலியல் தொழிலாளியாக இருந்து மஅரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் நாளை நாடு முழுவதும் வெளியாகயுள்ள நிலையில், இந்த படத்தை தடை செய்யக் கோரி கங்குபாயின் மகன் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், படத்தின் பெயரை மாற்றுமாறு படக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கு தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் தனது மனுதாரரிடம் ஆலோசனை செய்துவிட்டு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 1469

    0

    0