அட நம்ம அஜித் பட நடிகை சுரேகா வாணியா இது.. மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியல..!(வீடியோ)
Author: Vignesh12 January 2024, 10:50 am
46 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.
இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது, மாடர்ன் உடை அணிந்து கொண்டு பளபளக்கும் தேகத்தை காட்டி காதல் பாட்டுக்கு வாயசைத்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு வருவார்.
மேலும், மகளுடன் சுரேகா வாணி மாடன் உடைகளில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், அவரது மகளை ஹீரோயின் ஆகும்படி ரசிகர்களிடம் தொடர்ந்து கேட்டும் வந்தார். தற்போது, விஷயம் என்னவென்றால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு மொட்டை அடித்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மகளுக்கான வேண்டுதலா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அவர் முடி இல்லாமல் வெளியிட்டு இருக்கும் போட்டோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.