மோடி முதல் சூப்பர்ஸ்டார்ஸ் வரை.. கோலாகலமாக நடந்த நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்..!(வீடியோ)
Author: Vignesh17 January 2024, 4:26 pm
மலையாள திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தீனா, ஐ, சமஸ்தானம், தமிழரசன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்திற்கு மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக வருகை தந்துள்ளன.
மேலும், மணமக்களை வாழ்த்திய பின் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது. பல திரை உலக நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தியுள்ளார்.
மேலும், நடிகர் ஜெயராம், நடிகை குஷ்பு என திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்திற்கு படையெடுத்து வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர். மேலும் இந்திய பிரதமர் மோடியும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரஸ் ஆகி வருகிறது.
Modi ji attends Suresh Gopi’s Daughter Wedding at Guruvayur!
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 17, 2024
pic.twitter.com/yEGZwUIhxv