நான் வரணும்னா 3 லட்சம் வேணும்.. ஓவர் அதுப்பில் கறார் காட்டும் ஆர்யாவின் முன்னாள் காதலி..!
Author: Vignesh31 July 2024, 12:43 pm
அறிமுக இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் அபர்ணதி ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் நாற்கரப்போர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் launch நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆனால், படத்தின் நாயகி அபர்ணதி மட்டும் பங்கேற்கவில்லை.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிகை அபர்ணதி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அதில், நடிகைகள் பிரமோஷனுக்கு வரமாட்டேன்னு சொல்றது தமிழ் சினிமாவோட சாபக்கேடு ஆகிவிட்டது. பிரமோஷனுக்கு வருமாறு தயாரிப்பாளர் போன் செய்து கூப்பிட்டு இருக்கிறார். அவங்க நான் வரமாட்டேன் எனக்கு ப்ரமோஷனுக்கு வரணும் அப்படின்னா தனியா காசு கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
இந்த விஷயத்தை தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார். நானும், அவரிடம் பேசினேன் வர முடியாதுன்னு சொன்னாங்க, அது மட்டும் இன்றி இரண்டு மூன்று கண்டிஷன் போட்டார்கள். நான் ஸ்டேஜ்ல யாரோட உட்காரனும் அப்படிங்கிற வரைக்கும் கண்டிஷன் போட்டாங்க, எனக்கு சமமானவர்கள் தான் உட்கார வேண்டும் என்று சொன்னார்.
எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. பின்னர், நான் நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கன்னு சொன்னேன். அதற்கு அவர், நான் நடிகர் சங்கத்தில் இல்லைன்னு சொல்லிட்டாங்க, இறுதியாக வருவீர்களா மாட்டீர்களா என கேட்டேன் மூன்று லட்சம் கொடுத்தால் வருவேன். இல்லைன்னா வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
நீங்க வரவே வேண்டாம்னு சொல்லி போனை கட் பண்ணி விட்டேன். பிறகு இரண்டு நாட்கள் கழித்து போன் பண்ணி சாரி சார் தெரியாம பேசிட்டேன்னு சொன்னார். அந்த ஃபங்ஷனுக்கு வருகிறேன்னு சொன்னார். ஆனால், தற்போது போன் போட்டால் வெளியூரில் இருப்பதாக கூறிவிட்டார்.
அவர் வெளியூரிலே இருக்கட்டும் இந்த மாதிரியான நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவை இல்லை. மற்ற தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயத்தை சொல்கிறேன். நடிகை அபர்ணதி வசந்த் பாலன் இயக்கிய ஜெயில் படம் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து, அவர் நடித்த தேன், இருகப்பற்று ஆகிய படங்கள் ஹிட் ஆனதும் நடிகை அபர்ணதி செய்யும் இந்த அட்ராசிட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.