லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..தட்டி தூக்கிய ஆர்.ஜே.பாலாஜி..!

Author: Selvan
29 November 2024, 9:25 pm

ஆர்.ஜே.பாலாஜி நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.இவர் சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்,கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Suriya 45 movie updates

சமீபத்தில் படத்தின் பூஜை கோவையில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில்,லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷுக்கு அம்மாவாக நடித்த ஸ்வஸ்திகா,சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் த்ரிஷாக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படியுங்க: ஸ்டார் நடிகருடன் நெருக்கம்…திருமணத்தில் குதித்த விருது நடிகை…அப்போ அந்த இசையமைப்பாளர்..?

ஒருவேளை சூர்யாக்கு அம்மாவாக நடிக்க இருப்பாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஸ்வஸ்திகா சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பாக்கப்டுகிறது.

தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!