லக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
Author: Udayachandran RadhaKrishnan28 December 2024, 1:16 pm
சூர்யாவுக்கு 2025 ஜாக்பாட் வருடம் என்றே சொல்லலாம். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45வது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பொள்ளாச்சி, ஆனைமலையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதையும் படியுங்க: நடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
இதையடுத்து 46வது படமாக லக்கி பாஸ் படத்தை இயக்கிய,வெங்கி அட்லூரியிடன் இணைகிறார். 796CC என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மாருதி காருடைய முதல் எஞ்சின் தயாரிக்கப்பட்ட விதம் குறித்த படம் என கூறப்படுகிறது. லக்கி பாஸ்கர் மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், சூர்யாவின் இந்த படத்துக்கு இப்பவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.