மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?
Author: Prasad4 April 2025, 5:18 pm
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ
சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். ஆனால் “நந்தா” திரைப்படம் அவரை ஆக்சன் ஹீரோவாக அவரது டிராக்கை மாற்றியமைத்தது. எனினும் நடுவே “வாரணம் ஆயிரம்” என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இத்திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.

மீண்டும் ரொமான்டிக் ஹீரோ
இந்த நிலையில் நடிகர் சூர்யா மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வெங்கி அட்லூரி இயக்கவுள்ள ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம்.
“சார்”, “லக்கி பாஸ்கர்” போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின்ன் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட சூர்யாவும் படக்குழுவுக்ம் திட்டமிட்டு வருகிறார்களாம்.

வாடிவாசல் எப்போது?
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.