அட்லீ இயக்கத்தில் வாரிசு நடிகர்?.. குரு டவுன் ஆனதும் சிஷ்யன் பிக்கப் பண்ணிட்டாரே..!

Author: Vignesh
31 July 2024, 9:18 am

ஜவான் படத்தினை ரிலீஸ் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனது அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அட்லீ இருந்து வருகிறார். விஜய் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லி இருந்தால் கூட ஷாருக்கானையும், விஜயையும் வைத்து ஒரு சூப்பரான பான் இந்தியா படத்தை அட்லீ இந்நேரம் ஆரம்பித்து இருப்பார்.

ஆனால், அது நடக்காமல் போக அல்லு அர்ஜுனும் அட்லீ படத்தில் நடிக்கப் போவதில்லை என தகவல்கள் வெளியான நிலையில், அட்லீ அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

atlee kumar

இந்த நிலையில், கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் விரைவில் நிறைவடை உள்ள நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க போவதாகவும் கூறப்படுகிறது. அட்லீ படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உண்மை தெளிவாகும்.

இது ஒரு புறம் இருக்க சங்கரின் சிஷ்யனான அட்லீ டாப் கீயரில் சென்று கொண்டிருக்கும் நிலையில், சங்கர் ஷங்கர் டேக் ஆஃப் ஆக டைம் எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

Shankar

முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய சரவை சந்தித்த நிலையில், இந்தியன் 3 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!