வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?
Author: Prasad28 April 2025, 5:31 pm
இவ்வளவு இழுபறியா?
கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத்திரைப்படத்திற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தாலும் இப்போது வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.
இடையில் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் பிசியாகிவிட்டனர். இத்திரைப்படங்களுக்குப் பிறகாவது “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு, சூர்யா, வெற்றிமாறன் ஆகியோரை தான் சந்தித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
சூர்யா எடுத்த திடீர் முடிவு
“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நீடிக்குமாம். அந்த வகையில் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது, சூர்யா வெற்றிமாறனிடம் “வாடிவாசல்” திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்டுள்ளாராம். ஏனென்றால் வெற்றிமாறன் வருடக்கணக்கில் படப்பிடிப்பை இழுத்தடித்து விடுவார் என்று சூர்யா பயப்படுகிறாராம். ஆதலால் முழு ஸ்கிரிப்ட்டையும் சூர்யா கேட்டுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவலும் வெளிவருகிறது.