கங்குவா திரைப்படம்:
நடிகர் சூர்யாவின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரோமோன் செய்தார்கள். பட குழு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து அடுத்தடுத்த பிரமோஷன்களை செய்து வந்தார்கள்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டு படம் வெளியானதும் அது அப்படியே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நாம் எதிர்பார்த்த அளவுக்கு கங்குவா திரைப்படம் இல்லை.
பட குழுவினர் எனவோ ஆஹா ஓஹோ என்றெல்லாம் பேசி பிரமோட் செய்து வந்தார்கள். சூர்யா இந்த திரைப்படத்தை வாய் பொளந்துக்கொண்டு பார்ப்பீங்க என்றெல்லாம் பேசியிருந்தார்.
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா:
அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட ரூ.2000 கோடி வசூலை இந்த கங்குவா திரைப்படம் ஈட்டி மாபெரும் வசம் சாதனை படைக்கும். தமிழ் சினிமா வரலாற்றையே கங்குவா திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கப் போகிறது.. அது மட்டும் இல்லாமல் பாகுபலி கே ஜி எஃப் போன்ற படங்களின் வசூலையே முறியடிக்க போகிறது கங்குவா என்றெல்லாம் இஷ்டத்துக்கும் கதை விட்டார்கள் .
ஆனால் படம் வெளியாகி படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்த பல ஆடியன்ஸ் தங்களது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். இதனால் சூர்யா மார்க்கெட் இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து சூர்யாவை நம்பி படம் இயக்க எந்த ஒரு தயாரிப்பாளர்களும் முன் வரவை யோசிப்பார்கள். ஏனென்றால் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி பெரும் தோல்வி படமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது.