நன்றி கெட்ட நடிகர் சூர்யா… வளர்த்து விட்ட இயக்குனரை மிரட்டி பணம் வாங்கிய கொடுமை!

Author: Shree
12 May 2023, 8:57 am

உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யாவின் ஆரம்ப காலகட்டத்தில் அவரின் அபார வளர்ச்சிக்கு முக்கிய புள்ளியாக இருந்தவர் இயக்குனர் பாலா தான். ஆம், பாலா பெரிய நடிகர் என்ற அடையாளம் இன்றி திறமைக்கு சரியான கதையும் கிடைக்காமல் இருந்து வந்த நேரத்தில் தான் பாலா சூர்யாவை நம்பி நந்தா படத்தை இயக்கினார். அந்த படம் பாலாவின் சாயலில் எடுக்கப்பட்டு சூர்யாவின் திறமைகளை மெருகேற்று மக்களுக்கு நல்ல நடிகராக சூர்யாவை காட்டினார்.

நந்தா திரைப்படம் சூர்யாவின் கெரியரின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைந்தது. அதன் பின் மீண்டும் பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்து மேலும் பிரபலமாக்கினார். சூர்யாவை மட்டுமல்லாது அவரது மனைவி ஜோதிகாவுக்கு நாச்சியார் ஹிட் படத்தை இயக்கி ரீஎன்ட்ரியில் ஹிட் கொடுக்க செய்தார். சூர்யாவின் வளர்ச்சிக்கு இவ்வளவு உதவிய பாலாவால் வணங்கான் படத்தால் தனக்கு ரூ. 7 கோடி செலவாகியதாக அதை திருப்பி தர சொல்லி சூர்யா பாலாவை மிரட்டினாராம்.

பணத்தை கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கும் போவேன் என்று மிரட்டியதாகவும் அவமானப்பட்ட பாலா கடன் வாங்கி ரூ. 7 கோடியை கொடுத்ததாகவும் செய்திகள் கூறுகிறது. அவரால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் சூர்யா. அவரால் எத்தனை கோடி சம்பாதித்திருப்பர். அப்படியிருந்தும் நன்றி உணர்வு இல்லாமல் நடந்துக்கொண்டதை நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். இருந்தும் இது எந்த அளவிக்ரு உண்மை என்பது தெரியவில்லை.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 683

    1

    2