டென்மார்க்கிற்கு ஜாலி ட்ரிப் அடித்து குடும்பத்தோடு குதூகலிக்கும் சூர்யா (வீடியோ)

Author: Shree
4 July 2023, 10:55 am

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். இருவரும் இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். ஜோதிகா கூட மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார். அதன் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இதனால் சூர்யா மோசமாக விமர்சிக்கப்பட்டார். காரணம் அப்போ இந்தி தெரியாது போடா என வாய் கிழிய பேசி எதிர்ப்புகள் தெரிவித்துவிட்டு நிஜத்தில் தமிழ் தமிழ்நாடு வேண்டாம் போடா.. இப்போ இந்தி வேணும் வாடா என்று பச்சோந்தி போன்று மாறிவிட்டதை விமர்சித்தனர். இந்நிலையில் சூர்யா தனது மனைவி, பிள்ளைகளோடு டென்மார்க் சுற்றுலா சென்று ஜாலி செய்து வருகிறார். அதன் வீடியோவை மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 353

    0

    0