தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.
இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. அது என்னவென்றால், தற்போது இந்த படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கொண்டு வர இருக்கிறார்கள்.
இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு கேட்டு இருக்கிறார். கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று மட்டும் கேப்டன் குடும்பத்தினர் நிபந்தனை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இனிவரும் நாட்களுக்கு படம் குறித்த நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் பிளான் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விஜய் மற்றும் சூர்யா சம்பந்தப்பட்ட விஷயத்தை குறித்து தற்போது பேசியுள்ளார். அதாவது, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது சூர்யா எனக் கூறியுள்ளார். துப்பாக்கி படத்தின் கதையை சூர்யாவிற்காக தான் ஏ ஆர் முருகதாஸ் எழுதியதாகவும், ஆனால், அதையடுத்து விஜய்க்கு நடிக்க சூர்யா வாய்ப்பு கொடுத்ததாக ஞானவேல் ராஜா பேசியுள்ளார். துப்பாக்கி தான் விஜய்யின் நடிப்பில் வெளிவந்து ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.