கருத்து கந்தசாமி டூ மௌன குரு…. அந்த விஷயத்தில் சூர்யா பச்சோந்தி – விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
4 July 2023, 2:20 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். இருவரும் இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். ஜோதிகா கூட மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார். அதன் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இதனால் சூர்யா மோசமாக விமர்சிக்கப்பட்டார். காரணம் அப்போ இந்தி தெரியாது போடா என வாய் கிழிய பேசி எதிர்ப்புகள் தெரிவித்துவிட்டு நிஜத்தில் தமிழ் தமிழ்நாடு வேண்டாம் போடா.. இப்போ இந்தி வேணும் வாடா என்று பச்சோந்தி போன்று மாறிவிட்டதை விமர்சித்தனர். மேலும் சூர்யா மேடைகளில் கருத்து சுதந்திரம் பேசிவிட்டு மும்பைக்கு போனதும் மௌன குரு போல் மாறிவிட்டார் என ட்ரோல் செய்துள்ளனர். சமயத்திற்கு தகுந்தாற் போல் நாடகம் ஆடுபவர் சூர்யா என விமர்சித்துள்ள ரசிகர் ஒருவர் அகரம் அறக்கட்டளையை துவங்கியதே வருமானவரி கட்டக்கூடாது என்பதற்காகத்தான் என முகத்திரையை கிழித்துள்ளார். மேலும் சூர்யா தமிழையும், தமிழ் சினிமாவையும் யூஸ் பண்ணிக்கிட்டு வேலையை காட்டிவிட்டார் என கூறி வருகின்றனர் மக்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?